இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்!
27 Jul,2021
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெக்யோங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 திகதி இலங்கைக்கு வரவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடவுள்ளார் .

சீன பிரதமர் துறைமுக நகரின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது கொழும்பு துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு விவகாரம் மற்றும் சீனாவின் பொறுப்புகள் என்பது குறித்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதோடு அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்படவுள்ளது.