வைரஸ் பாதிப்பை அடுத்து இலங்கைக்கான விமான சேவையை நிறுத்தியது சீனா!
20 Jul,2021
சில பயணிகள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டமையை தொடர்ந்து, இலங்கைக்கான ஒரு விமானத்தை ரத்து செய்து, மற்றொரு விமான சேவையை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்துள்ளது.
கொழும்பிலிருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் விமானங்கள்கள் ஜூலை 26 முதல் சீனாவின் பொது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரால் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என்று ஷாங்காய் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.