இலங்கையில் இசை நிகழ்ச்சிளை நடாத்துவதற்கு அனுமதி!
16 Jul,2021
சுகாதார விதிமுறைகளுக்கமைய இன்று(16) முதல் உள்ளக இசை நிகழ்ச்சிளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, மண்டபத்தில் 50 வீதமானவர்களின் பங்குபற்றுதலுடன் இசைநிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் இசைநிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.