இலங்கையிலிருந்து சீனாவுக்கு அவசரமாக சென்ற விமானங்கள்
11 Jul,2021
இலங்கையில் அண்மைய சிலநாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொண்டு வரும் நோக்கில் ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமானங்கள் இரண்டு சீனாவை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளன.
இந்த விமானங்கள் நாளைய தினம் 20 லட்சம் சைனோபாம் தடுப்பூசிகளுடன் மீண்டும் நாட்டை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவிலான தடுப்பூசிகளை கொண்டு வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானம், சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இன்று காலை முதலாவது விமானத்தில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்திருந்தது இரண்டாவது விமானமும் வந்துள்ள நிலையில் மொத்தமாக 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 மற்றும் 869 ரக விமானங்கள் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டடுள்ளன.
அதேநேரம் இந்த சைனோபாம் தடுப்பூசிகள் இதுவரை முதலாவது தடுப்பூசியேனும் செலுத்தப்படாதவர்களுக்காக ஏற்றப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை கொண்டு வரும் நோக்கில் ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமானங்கள் இரண்டு சீனாவை நோக்கி நேற்று புறப்பட்டு சென்றிருந்தன. அவற்றில் இரு லிமானங்களும் தடுப்பூசிகளை சுமந்துகொண்டு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.