சிறுமியை சீரழித்த இருதய சிகிச்சை நிபுணரும் சிக்கினார்! - இதுவரை 34 பேர் கைது.
06 Jul,2021
கல்கிஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த வழக்கில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பண்டாரகம பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கொழும்புக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் இருதய நிபுணராக பணியாற்றி வருகிறார்.
குறித்த வழக்குடன் தொடர்புடைய 34 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 7 ஆம் திகதி முதல் கல்கிஸை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்று வரை கைதுசெய்யப்பட்ட 32 சந்தேக நபர்களில் அவரது தாயும் உள்ளடங்குவார்.
அது தவிர மருத்துவர், முச்சக்கர வண்டி சாரதி, கார் சாரதி, துறவியொருவர், ஒரு மாணிக்க தொழிலதிபர், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவர், ஒரு கப்பலின் கப்டன், மாலைத்தீவு முன்னாள் அமைச்சர், வலைத்தள உரிமையாளர்கள் இருவர், ஒரு ஹோட்டல் முகாமையாளர் மற்றும் விளம்பரத்தை வடிவமைத்தவர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்