பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
04 Jul,2021
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.