யாழ் சண்டியில் 21 பெண்கள் உட்பட்ட 39 பேருக்கு தொற்று!
04 Jul,2021
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெண்கள் 21 பேர் உட்பட மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் நேற்று 244 பேருக்கு மேற் கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் இவ்வாறு சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்கள் தெரிவித்தன.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 239 பேரின் மாதிரிகள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அப்பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் 21 பேர் மற்றும் ஆண்கள் 18 பேர் என மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.