அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நாடகமாடுகிறது அரசாங்கம்!
27 Jun,2021
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடகமாடியுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின் அரசியல் தீர்மானத்தின் ஊடாக அது மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், மாறாக கொலைக்குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காக, தண்டனை நிறைவடைந்து விடுதலையாகவுள்ள கைதிகளை விடுவித்துவிட்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.