சிவப்பு பட்டியலில் இலங்கை- லண்டன் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்
06 Jun,2021
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்கள் எவரும் ஐக்கிய இராச்சியத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இன்று, நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.