கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
03 Jun,2021
நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு, சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல், அழகு சாதன பொருட்களின் மூலப்பொருட்கள் நிரம்பிய 'கன்டெய்னர்'களுடன், சமீபத்தில் சென்றது
கப்பல் தீப்பற்றிய நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்தியா உதவியுடன் தீ அணைக்கப்பட்ட பின், பாதுகாப்பு கருதி, கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு செல்ல, இலங்கை கடற்படை நேற்று முயன்றது. எதிர்பாராதவகையில், கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது.
கப்பலில், 325 டன் எரிபொருள், 25 டன் நைட்ரிக் அமிலம் உள்ளது.இது கடலில் கலக்கும் என்பதால், மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.