யாழ் பயணத்தடை தளர்த்தப்பட்டதால் யாழ். நகரில் குவிந்த மக்கள்!
25 May,2021
நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை, இன்றைய தினம் தளர்த்தப்பட்ட நிலையில், யாழ். நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடியதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சனநெரிசலையும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் முகமாக, இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே வருகின்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
அத்துடன் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் மாத்திரமே யாழ்.நகரில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.