சட்டவிரோத ஊடுருவல்: இலங்கையில் 4 பேர் கைது
14 May,2021
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கை அரசு கொரோனா பரவலை தடுக்க இந்திய பயணியர் வருகைக்கு தடை விதித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்றுள்ளனர்.இது குறித்து இலங்கை துணை டி.ஐ.ஜி. அஜித் ரோஹனா கூறியதாவது:தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி அவரது மகள் மற்றும் இரு குழந்தைகள் மீன்பிடி படகு மூலம் இந்திய கடல் எல்லை வரை வந்துள்ளனர்.
அங்கிருந்து இலங்கையைச் சேர்ந்த வேறு ஒரு மீன்பிடி படகில் ஏறி யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகரில் வந்து தங்கியுள்ளனர்; அவர்களை கைது செய்துள்ளோம்.அவர்கள் மீது சட்ட விரோதமாக இலங்கைக்கு வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.