இலங்கையில் இருந்து செல்லும் விமானங்களுக்கு குவைத்தும் தடை!
11 May,2021
மறு அறிவித்தல் வரும் வரை இலங்கையில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை நிறுத்துவதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் தீவிரமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் நேற்று இலங்கையில் இருந்து பயணிகள் விமானங்களை நாளை முதல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், மலேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளும் இலங்கை பயணிகள் விமானங்களின் சேவையை நிறுத்தியுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையை 75 ஆக கட்டுப்படுத்த இலங்கை அரசு அண்மையில் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.