தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 617 பேர் கைது
09 May,2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 617 பேர் நேற்றைய தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக ஒரே தினத்தில் அதிகளவானோர் கைது செய்யப்பட்ட தினம் இதுவாகும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதில் 342 பேர் கொழும்பு நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 6,539 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களை அடையாளம் காண்பதற்கு நாடு பூராகவும் பொது இடங்களை அண்டிய பகுதிகளில், நேற்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.