கடும் எச்சரிக்கை : 6 நாட்களுக்குள் 11,107 பேருக்கு கொரோனா : 56 பேர் உயிரிழப்பு! விகிதாசாரத்தில் இது இந்தியாவைவிட அதிகம்
07 May,2021
நாட்டில் கடந்த மே முதலாம் திகதி முதல் 6 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், ஆறு நாட்களுக்குள் கொரோனாவால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.மே முதலாம் திகதி ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 9 கொரோனா மரணங்கள் பதிவாகின.
மே 2 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் ஆயிரத்து 843 பேருக்கு வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. கொரோனாவால் அன்றைய தினம் 9 பேர் பலியாகினர்.
அத்துடன், மே 3 ஆம் திகதி ஆயிரத்து 913 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
மே 4 ஆம் திகதி ஆயிரத்து 860 பேருக்கும், மே 5 ஆம் திகதி ஆயிரத்து 897 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மே 4 ஆம் திகதி 14 பேர் உயிரிழந்தனர். அதனை மே 5 ஆம் திகதியே சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டியிருந்தது.
மே 6 ஆம் திகதி ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்று. 11 பேர் உயிரிழப்பு