இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிப்பு - இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவிப்பு
06 May,2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக இன்று 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 2,30,168 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிக்கப்படுவதாக, இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.