இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு !!
29 Apr,2021
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இருப்பினும் விசேட கட்டுப்பாடுகளுடன் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
புதுடெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே நாட்டை வந்தடைந்த இந்தியர்கள் தனி ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்தால் விமான நிலையங்களை மூடுவது அல்லது இலங்கைக்கு வருவதை ஒட்டுமொத்தமாக குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.