ரிஷாட் பதியுதீனும் சகோதரரும் நள்ளிரவில் கைது!
24 Apr,2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலை சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று நள்ளிரவில் அவரது இல்லத்தை சுற்றிவளைத்திருந்தனர். ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து கைது செயய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று அதிகாலை ரிஷாட் பதியுதீனையும் கைது செய்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.