இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தும் குள்ள மனிதர்களின் நடமாட்டம்!
13 Apr,2021
இலங்கையில் பல பகுதிகளில் குள்ள மனிதர்கள் பற்றி பல தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தன.
அந்தவகையில், பதுளை - இரண்டாம் கட்டை- நேத்ராகம பிரதேசவாசிகள் இந்த குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாத்தறை - தொட்டமுன மீனவ கிராமத்தில் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் தொடர்பாக தகவல்கள் பதிவாகியிருந்தன.
அவ்வாறே, குளியாப்பிட்டி - எலதலவ மற்றும் மூனமல்தெனிய போன்ற பிரதேசங்களிலும், அனுராதபுரம்- மஹாவிலச்சிய, எந்தகல்ல பிரதேசங்களிலும், அம்பாறை - தமன- தொட்டம பிரதேசங்களிலும் இதற்கு முன் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.