இலங்கையில் ஒரு தனிநாடு உருவாகியுள்ளது; ஆனால் தமிழர்களுக்கில்லை!
11 Apr,2021
கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் ஒரு தனி நாடு போன்ற ஒரு பகுதி என்றும், அதற்கான நிதி சக்தி கூட நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (11) அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய 25 சட்டமூலங்கள் கூட துறைமுக நகரத்தில் செல்லாது என்று அவர் கூறினார்.
அதன்படி, இது ஒரு தனி நாடு, ஆகும்.
இலங்கை மத்திய வங்கி, நாணய சபை மற்றும் பொது நிதியைக் கட்டுப்படுத்தும் நிதி அமைச்சகம் ஆகியவை துறைமுக நகர பணிப்பாளர் குழுவில் இல்லை .
அதன்படி, துறைமுக நகரத்தை கட்டுப்படுத்தும் குழுவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது என்பது தெளிவாகிறது.
எனினும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற விவாதம் கோரப்படும் என்றும் அதன் மூலம் உண்மைகள் நாட்டிற்கு வெளிப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.