திருமதி இலங்கை’ பட்டம் வென்றவரை தாக்கியதாக திருமதி உலக அழகி பட்டம் வென்றவர் கைது
09 Apr,2021
2021-ம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகா டி சில்வா முதல் இடம் பிடித்தார். அவரருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை.
புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் கரோலினா ஜூரி திருமதி உலக அழகி பட்டத்தையும் வென்றவர்.
கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கரோலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘‘நாங்கள் ஜூரி மற்றும் அவது உதவியாளர் சுலா மனமேந்த்ரா ஆகியோரை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதம் படித்தியதாகவும், தாக்கியதாகவும் கைது செய்துள்ளோம்.’’ என்று மூத்த போலீஸ் அதிகாரி அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.
புஷ்பிகா டி சில்வா ‘‘நாங்கள் புகாரை திரும்பப் பெற தயாராக இருக்கிறோம். பொது இடத்தில் இடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நீதிமன்றத்திற்க வெளியே இதை முடித்துக் கொள்ள நான் முயற்சி செய்தேன். அவர் மறுத்துவிட்டார். என்னால் மன்னிக்க முடியும். மறக்க முடியாது’’ என்றார்