இஸ்ரேல் - இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்
06 Apr,2021
இஸ்ரேல் - இலங்கை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மே-செப்டம்பர் மாதங்களில் 2000 முதல் 5000 வரையான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை காலம் என்பதால் இரு நாடுகளாலும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளை அழைக்க நாடு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தூதரகங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிலிருந்து ஏரோஃப்ளாட், ஷார்ஜா ஏர் அரேபியா, துபாய், ஃப்ளைடுபாய், இந்தியா விஸ்டாரா விமான நிறுவனங்கள் மற்றும் குஜெய்ட் ஜசீரா விமான நிறுவனங்கள் மூலம் இலங்கைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க விவாதங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.