வெள்ளவத்தை ஹோட்டலில் இளைஞனுடன் தங்கியிருந்த யுவுதி திடீர் மரணம்
25 Feb,2021
வெள்ளவத்தை, கொலின்வூட் பகுதியில் விடுதி ஒன்றில் இளைஞன் ஒருவருடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்ர்ள்ளார
கடந்த 17ஆம் திகதி இந்த யுவதி உயிரிழந்துள்ளார் என வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம, பெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதியுடன், திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே தங்கியிருந்துள்ளார்.
சம்பவம் இடம்பெறும் தினத்திற்கு முன்னர் அந்த விடுதிக்கு குறித்த இருவரும் வந்தார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுவதி திடீரென சுகயீனம் அடைந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த இளைஞன் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன