ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்தது அரசாங்கம்!
25 Feb,2021
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று முன்வைத்த அறிக்கையில் உள்ள ‘தீர்மானங்கள், பரிந்துரைகள், குற்றச்சாட்டுக்களை’ இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று முன்வைத்த அறிக்கையில் உள்ள ‘தீர்மானங்கள், பரிந்துரைகள், குற்றச்சாட்டுக்களை’ இலங்கை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அரசாங்கம் தமது முடிவை அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜெனிவா அமர்வில் பேசிய வெளிவிவார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கை ஐ.நா. சாசனத்தின் 2(7) ஐ முழுமையாக மீறும் செயல் என்றும் புலிகளின் அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்