அரசியல் கட்சிகளை உருவாக்க வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை!
16 Feb,2021
எமது நாட்டில் அரசியல் கட்சி தொடங்க எந்தவொரு வெளிநாட்டினருக்கும் அனுமதி கிடையாது என கடலோர பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் அரசியல் கட்சி தொடங்க எந்தவொரு வெளிநாட்டினருக்கும் அனுமதி கிடையாது என கடலோர பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவில் சில அரசியல்வாதிகள், தங்கள் உதவியாளர்களைப் பிரியப்படுத்த சில கதைகளைச் சொல்கிறார்கள். அவர்களைப் பற்றிநாம் கவலைப்படக்கூடாது. இந்த நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் அரசு ஒருபோதும் செய்யாது.
இதேவேளை எங்கள் கட்சியிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ உள்ள எவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த முடியும். ஜனநாயகம் என்பது இதுதான். யாராவது ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போது, அதை எங்கள் கட்சிக்கு காட்டிக் கொடுப்பதாக நாங்கள் கருதக்கூடாது.
அந்தவகையில் எமதுநாட்டில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க, எந்தவொரு வெளிநாட்டினரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்”என அவர் குறிப்பிட்டுள்ளார்.