பெண் ஜோதிடரிடம் தஞ்சமடைந்த மைத்திரி!
15 Feb,2021
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, பெண் ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தன்னுடைய எதிர்காலம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார். அனுராதபுரத்திலுள்ள பெண் ஜோதிடரை சந்தித்துள்ள மைத்திரிபால சிறினசேன, தனது குடியுரிமையை பாதுகாத்து கொள்வது தொடர்பிலேயே ஆலோசனைகளை கேட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமை, ஏழு ஆண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட வேண்டும் என, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிரேஷ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதே வழக்கமாகும். எனினும், முன்னாள் ஜனாதிபதி அனுராதபுரத்திலுள்ள ஞானக்கா என்ற ஜோதிட பெண்ணை சந்திப்பதற்காக, அவருடைய கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அந்த கோயிலுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நண்பகல் 12.30 வரையிலும் கோயிலில் இருந்துள்ளார். அவருடன் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே திலங்க தேலபண்டார, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோருக்கும் அங்கிருந்துள்ளனர் என அறியமுடிகின்றது