இலங்கையில் மேலும் 7 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 397 ஆக உயர்வடைந்துள்ளன.
கொத்தட்டுவை பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா, குருதி விசமானமை, சிறுநீரக நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கொடை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர், அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் குருதி விசமானமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொவிட்19 நிமோனியா, மோசமடைந்த சிறுநீரக நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பகுதியை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதன்பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 தொற்றால் ஈரல் செயலிழந்தமை, குருதி விசமானமை என்பன மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹவெல பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.
இதய நோய், இதயம் செயலிழந்தமை மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பகுதியை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்றுடன் குருதி விசமானமை அவரது மரணத்திற்கான காரணமாகும்.
கம்பளை பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா நிலை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 தொற்று தீவிரமடைந்தமையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.