இந்தியாவுக்கான விமான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை
12 Feb,2021
கொரோனாவுக்குப் பின்னர் இதுவரையான காலப்பகுதியில் 1682 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
கொரோனா தொற்றின் தாக்கத்தையடுத்து, இவ் வருடம் ஜனவரி 21ஆம் திகதிக்கு பின்னரான இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 1682 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
சீனா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதுடன், ஏனைய நாடுகளில் இருந்து சிறியளவிலான எண்ணிக்கையானோரே இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தற்போது ஏனைய நாடுளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதுடன், இனிவரும் காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமானளவில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இதேவேளை, இலங்கை – இந்தியாவுக்கான விமான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபைதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.