கொழும்பில் ராஜீவ்காந்தியை தாக்க முற்பட்டவேளை பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி மரணம்
11 Feb,2021
கொழும்பில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கடற்படை சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சமயத்தில், ராஜீவ் காந்திக்கு பிரதான பாதுகாப்பளாராக இருந்த ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரி காலமானார்.
ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபரான காமிலஸ் அபேகுணவர்தன என்பவரே உடல்நலக்குறைவால் உயிரிழந்தவராவார்.
ஜூலை 1987 இல் கொழும்பில் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டபோது கடற்படை சிப்பாய் ஒருவர் ராஜீவ் காந்தியை திடீரென தாக்கமுற்பட்டவேளை ராஜீவ் காந்திக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்கும் தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இவர் இருந்தார்.
இவர் 1980 காலப்பகுதியில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியவராவார்.
அவரது பூதவுடல் சனிக்கிழமை காலை 9.00 மணி வரை கொழும்பிலிலுள்ள மலர்ச்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை 10 மணிக்கு மவுண்ட்லவனியா மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.