சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு
04 Feb,2021
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னிப்பின் கீழ் இன்றைய(04) தினம் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் 31, நவம்பர் 20 மற்றும் இந்த வருடம் ஜனவரி 08 ஆகிய நாட்களில் சி றைக்கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டமையினால், இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்ளென்றும் தெரிவிக்கப்படுகிறது.