ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் !
03 Feb,2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொய் சாட்சியத்தை உருவாக்கி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டமை அடங்கலாக சில குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது