சென்னையில் மூன்றுபாதாள உலக குழு இலங்கையர்கள் கைது!
02 Feb,2021
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குணாவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் ஒரு பாதாள குழு உறுப்பினரான பும்பா என்ற சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த மூவரும் சென்னையில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குறித்த மூவரும் இரகசிய இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.