கடன் திருப்பிச் செலுத்த முடியாத அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை மீட்டெடுக்கப்போகின்றது?
31 Jan,2021
கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, கருவூலத்தால் கிடைக்கும் ஆண்டு வருமானத்தை விட கடனை திருப்பிச் செலுத்தும் தொகை அதிகமாகும் என சுட்டிக்காட்டினார்.
2021 ஆம் ஆண்டில் இலங்கையின் வருமானம் 1,919 பில்லியன் என்றும், 2021 ஆம் ஆண்டிற்கான திருப்பிச் செலுத்தும் கடன் 2,017 பில்லியன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கருவூலத்திற்குள் உள்ள அனைத்து நிதிகளும் போதுமானதாக இருக்காது என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.