அண்ணன் கட்டியெழுப்பிய ராஜ்ஜியம் தம்பியால் அழிவு: மீண்டும் இந்தியாவுடன் ஒரு தோல்வி
26 Jan,2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தை அவர் ராமாயாணத்துடன் தொடர்படுபடுத்தி கருத்து வௌியிட்டுள்ளார்.
பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை மாற்றி அமைக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்ட போல அதன் ஒரு கட்டமாகவே இதனை நாம் பார்க்கிறோம். இது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு கட்டம்.
மோடி ஏதேனும் வகையில் துறைமுக விடயத்தில் வெற்றிபெற்றால் ராமாயணத்தில் இராவணனை ராமர் வென்றது போலாகிவிடும். பாரத நாட்டினால் மீண்டும் ஒருமுறை இலங்கை தோல்வியடையச் செய்யப்படும்.
இலங்கை முன்னேற்றம் அடைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. எமது நாட்டின் சௌபாக்கியத்தை எடுத்துச் செல்லவே ராமர் இலங்கை வந்தார். ராமர் வருவதற்கு முன் அனுமன் நாட்டுக்கு வந்து குரங்குகளின் வால்களில் தீ வைத்து ஆங்காங்கே பிரச்சினைகளை ஏற்படுத்தினார். அதில் உள்ள உள்ளார்ந்த கதைதான் ஒற்றர்கள் இலங்கை வந்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் பிரச்சினை ஏற்படுத்துவர். ராமாயணத்தில் இராவணனும் அவரது சகோதரனும் பகைத்துக் கொள்வர். இறுதியில் விபீசனன் நாட்டை காட்டிக் கொடுப்பார். இறுதியில் தம்பியால் அண்ண்ன் கட்டியெழுப்பிய ராஜ்ஜியம் அழிவை நோக்கி செல்லும். இதுதான் ராமாயணக் கதை. இன்று இந்தியா வருவதும் இதற்குத்தான். நாம் இந்த ஆக்கிரமிப்பில் சிக்கிக் கொண்டுள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த போதே மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.