கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு
18 Jan,2021
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு, மோதரை, களுத்துறை, தெஹிவளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.
மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருடனும் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.