டிசம்பர் முதல் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை !
16 Jan,2021
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 329 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 26 பெண்களும் 1,100 ஆண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 371 பெண்கள் மற்றும் 10 ஆயிரத்து 832 ஆண்கள் 2020 டிசம்பர் 1 முதல் ஜனவரி 16 வரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.