ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை
12 Jan,2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட அமர்வினால் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த, நீதிபதிகள் குழுவின் அமர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.