முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை
09 Jan,2021
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவ்விடயத்தில் தலையிடப் போவதில்லை எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனை பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத பட்சத்தில் மாத்திரமே இராணுவம் களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.