ஜனவரி மாத இறுதிக்குள் விமான நிலையங்களைத் திறக்க நடவடிக்கை
04 Jan,2021
10 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இலங்கை தனது விமான நிலையங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்காக ஜனவரி மாத இறுதிக்குள் திறக்கும் என்று விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களை மூடியுள்ள நிலையில் , ‘புதிய இயல்புநிலைக்கு’ ஏற்ப, சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகளைச் செய்ய அரசாங்கம் நம்புகிறது என்று விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது .
ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளை வரவேற்கவும், விமான நிலையங்களைத் திறக்கவும் தொடங்கியுள்ள நாடுகளிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ளும் என்று அமைச்சு நேற்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.