ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பௌத்த மதகுருவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
03 Jan,2021
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மீளப்பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்த திகதியொன்றில், மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது