பலாலி விமான நிலையம் தற்போது திறக்கப்படாது: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
21 Dec,2020
“இம்மாதம் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்களின் திறப்பு தொடர்பில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயப்படும்.” என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 26ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளது. ஏனைய விமான நிலையங்கள் இப்போது திறக்கப்படாது. அவை திறக்கப்படுவது தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியில்தான் ஆராயப்படும்” என்றார்.