இலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய தனித்தீவை ஒதுக்கிய மாலைதீவு
16 Dec,2020
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் தனித் தீவொன்றை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாலைதீவு அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கும் தகவல் அளித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களை அடக்கம் செய்ய மாலைதீவு ஜனாதிபதி இப்பராஹிம் முகமது ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்காளை தகனம் செய்வதற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.