தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக அரசாங்கம் அறிவிப்பு
16 Dec,2020
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர் நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்பட்டாலும், சனத் தொகைக்கு ஏற்றவாறு சிகிச்சை வழங்கும் முறை, நோயாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடு முறையாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக மேலும் பொறுப்புடன் செயற்படுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.