இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் திகதி இலங்கையில் இருக்கும் செயின்ட் ஆன்டனி தேவாலயத்தில் முதல் தற்கொலைத் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் ஷாங்கிரி லா ஹோட்டலிலும், மூன்றாவதாக அடுத்த சில மணி நேரங்களிலே மூன்று தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் திகதி இலங்கையில் இருக்கும் செயின்ட் ஆன்டனி தேவாலயத்தில் முதல் தற்கொலைத் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் ஷாங்கிரி லா ஹோட்டலிலும், மூன்றாவதாக அடுத்த சில மணி நேரங்களிலே மூன்று தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன.
அன்றைய தினம் ஈஸ்டர் தினம் என்பதால், பிரார்த்தனைக்காக தேவாலயத்தில் கூடியிருந்த ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின், இலங்கையில் இருக்கும் குடியிருப்பு பகுதி ஒன்றில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்க, பொலிசார் அங்கு விரைந்து சென்ற போது, தீவிரவாதிகள் தங்களிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்தனர்.
இதனால் மூன்று பொலிசார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்கா அருகிலுள்ள விடுதியில் குண்டுவெடிப்பு நடந்தது.
இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 290 பேர். அதுமட்டுமின்றி 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களும் மிக பெரிய திட்டமிடலுடன் நடத்தப்பட்டன. இந்த இரண்டு தீவிரவாத தாக்குதல்களும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில், அதுவும் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர்.
அதேபோல ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கையில் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்ததால் வெளிநாட்டு பயணிகள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படும் நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சிகர தகவல்நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்து வந்த நிலையில், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணை மூலம் இலங்கை அரசு தெரிவித்திருந்தது.
மேலும், விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்தான், நாடாளுமன்றத்தில் தற்போது பேசிய தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது.
ஐ.எஸ். அமைப்புடன், இலங்கை நபர் ஒருவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பு இருக்கும் தகவல் என்னிடம் உள்ளது. இந்த தொடர்புகள் குறித்து அரசு அறிந்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இவருக்கு பதில் கொடுத்த பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அரசுக்கு இந்த விவரங்கள் தெரியும். நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சிலருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் முழுமையான விசாரணை முடியும் வர அவர்கள் யார் என்ற ரகசியங்களை கூற முடியாது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 86 பேர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்,