அலரி மாளிகைக்குள்ளேயும் நுழைந்தது கொரோனா!
25 Oct,2020
பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் பணியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற உணவகம் மற்றும் சமையலறைப் பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிசாருக்கு பொறுப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி மீன் கொள்வனவுக்காக பேலியகொட மீன்சந்தைக்குச் சென்றிருந்தார் என்றும் அங்கிருந்து அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இவர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடமாடியுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிசிஆர் சொதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, ஷங்ரி லா விடுதியின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஷங்ரிலா விடுதி உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், தமது விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், குறித்த விடுதி அறிவித்துள்ளது