20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு: தேசியப்பட்டியல் பெயரை அறிவிக்கப்போவதில்லை
20 Oct,2020
20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தமக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக அறிவிப்பை ஒத்திவைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
கடந்த நாட்களாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியதுடன், தேசிய பட்டியல் ஆசனத்திற்கு ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டாம் என்ற முடிவை கட்சி எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தனது போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து தொடரும் என்றும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை எதிர்த்து ஒருவரை கூட நாடாளுமன்றத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.