பிறந்த தேசத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டோம்! இப்போது மகிழ்ச்சியாக - இலங்கையை பிரிந்த பின்னர் வெளியான தகவல்
17 Oct,2020
ஊடகவியலாளர் ஃபிரட்ரிகா ஜான்ஸ் இலங்கையை விட்டு வெளியேறிய நிலையில்; அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக தமது பேஸ்புக் பதிவில், தாமும் தமது குடும்பத்தினரும் இந்த வாரம் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றுக்கொண்டதாக ஜான்ஸ் தெரிவித்துள்ளார்.
தாம் பிறந்த நாட்டால் வெளியே தள்ளப்பட்டு, விலகி, துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் தாம் நேசித்த மற்றும் ஒருபோதும் வெளியேற விரும்பாத நாடு என்று இலங்கையை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்கா தன்னையும் தமது பிள்ளைகளையும் அரவணைத்துக்கொண்டது. அந்த நாட்டில், தாம்; அமைதியையும் மகிழ்ச்சியையும் காண்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மனித இயல்பு மீதான நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனவே நன்றி அமெரிக்கா, ”என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் செய்தித்தாளில் பணியாற்றிய போது ஜூலை 2012 இல், அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு எதிராக தொலைபேசியில் தகாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதாக ஜான்ஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.
தமது எழுத்து நடையை கட்டுப்படுத்தவோ அல்லது அவரது நம்பகத்தன்மையை விட்டுக்கொடுக்கவோ ப்ரட்ரிக்கா ஜான்ஸ் மறுத்துவிட்டார். ஃபிரட்ரிக்கா ஜான்ஸ் பின்னர் சண்டே லீடர் செய்தித்தாளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,
இந்தநிலையில் சண்டே லீடர் செய்தித்தாள் பின்னர் நிதி தடைகளை எதிர்கொண்டநிலையில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.