பத்து மாதக் கைக்குழந்தைக்கு கொரோனா
09 Oct,2020
கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாதக் கைக்குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரிய இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இருந்து நேற்று(வியாழக்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைவாகவே குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது