மர்மான முறையில் உயிரிழந்த 17 வயது மாணவி.!! கட்டிலுக்கு அடியில் சடலமாக மீட்பு.!
23 Sep,2020
பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்றும் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் என்று, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.பலாங்கொடை இந்து கல்லூரியில் கல்விகற்றுவந்த கே.லோசினி என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவியை காணவில்லை என அவரது தாய் நேற்று (22) தேடிய போது, வீட்டிலுள்ள கட்டிலுக்குக் கீழ், மாணவி சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் காணப்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.