போலியான செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
22 Sep,2020
இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, போலியான செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது.
போலியான தகவல்களுக்கு எதிரான சட்டங்கள் தற்போது காணப்படுகின்ற போதிலும், மறுசீரமைக்கப்பட்ட சட்டமூலம் நீதியமைச்சர் அலி சப்ரியினால் நேற்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போலியான செய்திகளை வெளியிடுவதற்கு எதிராக, எதிர்காலத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.